ARTIST: Joel Thomasraj
ORIGINAL SCALE: Dm
CHORUS:
என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே – 2 ஓ… ஓ…
CHORUS:
பயமில்லை பயமில்லை பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை பயமில்லை பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே
VERSE1:
சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார் – 2
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார் ஓ… ஓ… – 2
VERSE2:
பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ – 2
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் நடத்துவார் பயமில்லையே ஓ… ஓ… – 2
VERSE3:
முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே-2
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே ஓ… ஓ… – 2